பலத்த காற்றினால் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்  (2026.05.23) திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக முள்ளிப்பொத்தானை (96) – கிண்ணியா வீதியில் முள்ளிப்பொத்தானை சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பு பாரிய மரமொன்று வீதியின் நடுவில் முறிந்து விழுந்தது. 

இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

இதனை தம்பலகாமம் பிரதேச சபை  தவிசாளர் எச்.தாலிப் அலி, உறுப்பினர், ஊழியர்கள் முன்னின்று  மற்றும் தம்பலகாமம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மரத்தை வெட்டி அகற்றப்பட்டது.

உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Share the Post: