• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இணையவழி ஆபத்துகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க அக்கரைப்பற்றில் ‘Digital Safety Club’ உதயம்!

இணையவழி ஆபத்துகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க அக்கரைப்பற்றில் ‘Digital Safety Club’ உதயம்!

இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் விபரீதங்களைத் தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்றில் விசேட ‘டிஜிட்டல் பாதுகாப்பு கழகம்’ (Digital Safety Club) ஒன்று உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகமே விரல் நுனிக்குள் சுருங்கியுள்ள போதிலும், அதனுடன் இணைந்ததாக வெறுப்புப் பேச்சுக்கள் (Hate Speech), ஆன்லைன் பண மோசடிகள் (Online Scam), போலிச் செய்திகள் (Fake News), இணையவழி மிரட்டல்கள் (Cyber Bullying) மற்றும் ஆன்லைன் மூலமான துன்புறுத்தல்கள் (Online Harassment) போன்ற பல்வேறு டிஜிட்டல் அபாயங்களும் அச்சுறுத்தல்களும் இன்று சமூகத்தில் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, இவ்வாறான இணையவழிப் பொறிகளில் சிக்கி இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் தங்களது எதிர்காலத்தையும், மன அமைதியையும் இழந்து வரும் அவல நிலை தொடர்கின்றது.

இந்த ஆபத்தான பின்னணியில் இருந்து பிரதேசவாசிகளை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரைப் பாதுகாக்கும் உன்னத நோக்கோடு இந்த ‘Digital Safety Club’ அக்கரைப்பற்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்கழகத்தின் ஊடாக டிஜிட்டல் ஊடகங்களை எவ்வாறு பாதுகாப்பான முறையிலும், பொறுப்புடனும் கையாள்வது என்பது குறித்த விசேட விழிப்புணர்வு செயற்திட்டங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை போராட்டத்தை குழப்புவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு—கட்சி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்