• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மலையகத்தில் அதிர்ச்சி: 13 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 45 வயது குடும்பஸ்தர் கைது, தோட்டத்தில் கொந்தளிப்புடன் பாரிய போராட்டம்!

மலையகத்தில் அதிர்ச்சி: 13 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 45 வயது குடும்பஸ்தர் கைது, தோட்டத்தில் கொந்தளிப்புடன் பாரிய போராட்டம்!

மலையகம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிலிகுற்றி தோட்டத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கொடூரமான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் நேற்று முன்தினம் (21) மாலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக எவ்வித தளர்வுகளுமின்றி சட்டத்தின் மூலம் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை முதல் முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் குதித்தனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தோட்டத்தின் கொழுந்து மடுவத்தில் ஒன்றுகூடிய 200-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள், குற்றவாளிக்கு தகுந்த தட்டையான தண்டனையை உடனடியாக வழங்கக் கோரி பதாகைகளை ஏந்தியவாறு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post:

Related Posts