• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • “போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்”: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் பாரிய விழிப்புணர்வு பேரணி!

“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்”: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் பாரிய விழிப்புணர்வு பேரணி!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு “போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” எனும் தொனிப்பொருளில், அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி நேற்று (23) கல்முனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பேரணிக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி தலைமை தாங்கினார்.

நேற்று காலை 9.30 மணியளவில் சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக ஆரம்பமான இப்பேரணியில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இளைஞர் சமூகம், சமூக அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்ட இப்பேரணியில், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் கல்முனை நகர் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சாய்ந்தமருது எல்லையில் ஆரம்பமான பேரணி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் வந்தடைந்து நிறைவு பெற்றது.

போதைப்பொருள் பாவனையினால் தற்கால சமூகத்திற்கும், குறிப்பாக நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாரிய அழிவுகள் மற்றும் பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஆழமாக விதைப்பதே இந்த விசேட பேரணியின் பிரதான நோக்கமாகும். இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் எனப் பல முக்கிய தரப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.