admin

டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய நாணய மாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், டொலரின் விற்பனை விலையும் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.30 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26) இதன் விற்பனை விலை 341.87 ரூபாயாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதாரக் காரணிகள் மற்றும் வெளிநாட்டு நாணயச் சந்தையின் நகர்வுகளுக்கு அமைவாக,

டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய நாணய மாற்று வீதம்! Read More »

பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மாண்புமிகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் நிலையில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் 24 பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார். சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான நல்லுறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு சபாநாயகர் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் தூதுவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையில் தனது பதவிக்காலம் முழுவதும்

பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் Read More »

உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ATI யின் சமூகப் பணி.

உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபாவின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா முதலாம் ஆண்டு மாணவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர் மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல்

உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ATI யின் சமூகப் பணி. Read More »

சொத்து, கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு

சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக்

சொத்து, கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு Read More »

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் உன்னத சேவைகளை ஆற்றினர். நாட்டுக்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து சிறந்த சேவையாற்றினர். இன்றைய உலகில் நிலவும் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் அமைதி வலயமாவதற்குப் பதிலாகப் போர் அபாயத்திற்கு ஆளாகி காணப்படுகின்றது. அமைதி வலயமாய் இருந்த இந்தியப் பெருங்கடல் ஒரு கட்டத்தில் போரின்

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Read More »

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரவிற்கு அவசரக் கடிதம்

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் சிறப்புக் குழு அமைச்சரவை பத்திரத்தை ரத்துசெய்! –  இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரவிற்கு அவசரக் கடிதம் பாறுக் ஷிஹான்கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டவாச்சியை மற்றும் கிழக்கு மக்களின் அடிப்டை உரிமையினை மீறும் செயலன

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரவிற்கு அவசரக் கடிதம் Read More »

மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் 80 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட IBCC – Season 04 கடந்த வெள்ளிக்கிழமை ( 26 )ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில் 17 அணிகள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

03 நாட்கள் லீக் முறையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 1998 ம் ஆண்டு அணியும் , 1996 ம் ஆண்டு அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி நேற்று திங்கட்கிழமை (29) பலப்பரீட்சை நடாத்தின. இதன் போது 1998ம் ஆண்டு இவ்வாண்டுக்கான சவால் கிண்ணத்தை சுவீகரித்தது. இரண்டு கட்டமாக நடந்தேறிய இச்சுற்றுப் போட்டியில் லெஜன்ட் ப்ரோ அணி மற்றும் லெஜன்ட் ப்ரோ மக்ஜ் அணி பலப்பரீட்சை நடாத்தியது.அதில் லெஜண்ட் ப்ரோ அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது பெண்களுக்கான

மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் 80 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட IBCC – Season 04 கடந்த வெள்ளிக்கிழமை ( 26 )ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில் 17 அணிகள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. Read More »

கிண்ணியாவில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

விசேட தேவையுடைய கிண்ணியா மாணவர்களின் பெற்றோர்களை வழிநடத்தும் நோக்கிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நேற்று (29.06.2026) கிண்ணியா விஷன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. *கலைக் கல்வி சமூக சேவைகள் நிதியத்தின் (Association of Arts Education Social Service) ஏற்பாட்டில், அதன் தலைவர் பாஸித் முகைதீன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. *இதன்போது, விசேட தேவையுடைய மாணவர்களின் விசேட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் *அவர்களின் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள்

கிண்ணியாவில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு Read More »

பயணிகளுக்கு அதிநவீன வசதிகள்: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம்!

அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம் பயணிகளுக்குத் தேவையான அதிநவீன வசதிகளுடன் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து வருகை தரும் மற்றும் உள்ளூர் பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்த பஸ் நிலையம் சகல நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடனும் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கான நவீன காத்திருப்பு மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், சுத்தமான சுகாதார வசதிகள், நவீன வர்த்தக நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல் பலகைகள் உள்ளிட்ட பல

பயணிகளுக்கு அதிநவீன வசதிகள்: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம்! Read More »

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்     விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட  1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் இன்று (29) வரை    கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ்

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் Read More »