• Home
  • அரசியல்
  • நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் உன்னத சேவைகளை ஆற்றினர்.

நாட்டுக்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து சிறந்த சேவையாற்றினர்.

இன்றைய உலகில் நிலவும் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் அமைதி வலயமாவதற்குப் பதிலாகப் போர் அபாயத்திற்கு ஆளாகி காணப்படுகின்றது.

அமைதி வலயமாய் இருந்த இந்தியப் பெருங்கடல் ஒரு கட்டத்தில் போரின் தாக்கத்திற்கும், மற்றொரு கட்டத்தில் பனிப்போரின் தாக்கத்திற்கும் உள்ளாகி காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிதுல்பவ்வ மகுல் மகா விகாரையின் ஆலோக பூஜை நிகழ்வில் நேற்று இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

புவிசார் அரசியலில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக எமது நாடும் கடுமையான அபாயத்திற்குள்ளாகியிருப்பதுடன், 7 வருடங்களுக்குள் ஒரு நாடு என்ற ரீதியில் ஐந்து பெரும் பேரழிவுகளுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான பேரழிவுகளால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை காரணமாக, இந்த புவிசார் அரசியலுக்கு நாடு பலியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டுக்குள் என்னதான் அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்கள் நம்மத்தியில் இருந்தாலும், பல்வேறு உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு எமது நாடு அடிபணியாமல் இருக்க இலங்கை பிரஜைகளாகிய நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

Share the Post: