• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் 80 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட IBCC – Season 04 கடந்த வெள்ளிக்கிழமை ( 26 )ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில் 17 அணிகள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் 80 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட IBCC – Season 04 கடந்த வெள்ளிக்கிழமை ( 26 )ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில் 17 அணிகள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

03 நாட்கள் லீக் முறையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 1998 ம் ஆண்டு அணியும் , 1996 ம் ஆண்டு அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி நேற்று திங்கட்கிழமை (29) பலப்பரீட்சை நடாத்தின.

இதன் போது 1998ம் ஆண்டு இவ்வாண்டுக்கான சவால் கிண்ணத்தை சுவீகரித்தது.

இரண்டு கட்டமாக நடந்தேறிய இச்சுற்றுப் போட்டியில் லெஜன்ட் ப்ரோ அணி மற்றும் லெஜன்ட் ப்ரோ மக்ஜ் அணி பலப்பரீட்சை நடாத்தியது.அதில் லெஜண்ட் ப்ரோ அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பெண்களுக்கான எல்லே சுற்றுப்போட்டியில் 1996 ம் ஆண்டு அணியும் , 2005 ம் ஆண்டு அணியும் பலப்பரீட்சை நடாத்தின.

இதன் போது 2005 ம் ஆண்டு அணி எல்லே சுற்றுப்போட்டியின் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இந் நிகழ்வுகள் வித்தியாலய பிரதி முதல்வர் திருமதி சு.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் பிரபாகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஜெயரட்ணம் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக காரைதீவு உதவிப்பிரதேச செயலாளர் பிரணவரூபன் , உதவிக்கல்வி பணிப்பாளர் குகதாசன் , வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் விஸ்வஜிந்தன், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் தியாகராசா என்போர் கலந்து கொண்டனர்.

இதன் போது வெற்றியீட்டிய அணியினருக்கு பதங்கள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு, வெற்றிகேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Share the Post: