மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற கொடூர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாக பயணித்த பேருந்து (Bus) ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்து சாரதியின் அதீத வேகமும், அஜாக்கிரதையான வாகன ஓட்டமுமே இந்த விபத்து நிகழ முக்கிய காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கடுமையான காயங்களுக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துள்ளார்.

இப்பாதையில் அண்மைக்காலமாக பேருந்துகள் மிக முரட்டுத்தனமாகவும், போட்டி போட்டுக்கொண்டும் இயக்கப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற பொறுப்பற்ற முரட்டுத்தனமான சாரதிகளுக்கு எதிராக சட்ட அமலாக்கத்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






