• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில் ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’ புதிய தலைவர் கௌரவிப்பு: சமூக மேம்பாட்டிற்கான புதிய ஆரம்பம்

சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில் ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’ புதிய தலைவர் கௌரவிப்பு: சமூக மேம்பாட்டிற்கான புதிய ஆரம்பம்

​சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில், வரலாற்றுப் பாரம்பரியமிக்க ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’யின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர் (ADA) அல்ஹாஜ் I.A. ஜப்பார் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (15/07/2026) நேற்று புதன்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சம்மாந்துறை பிராந்தியத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய தலைவரை வாழ்த்தி கௌரவித்தனர்.

​நிகழ்வின் தலைமையுரையையும் வரவேற்புரையையும் மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் தலைவரும், சம்மாந்துறை மத்தியஸ்தர் சபையின் தவிசாளருமான அல்ஹாஜ் M.Y. அஹமது ஜலீல் (JP) அவர்கள் ஆற்றினார்.

​இந்நிகழ்வில் பிரதம நம்பிக்கையாளர் KMKA. ரம்சின் காரியப்பர், ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் MLH. பஷீர் மதனீ, குவாஸி நீதிபதியும் ஓய்வுபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தருமான ML. தாஸிம் (JP), மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் முன்னாள் அமீர் , மஸ்ஜிதுன் நகர் இமாம் MAM. ஜாபீர், மற்றும் மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் பொதுச் செயலாளர் AM. இலியாஸ், செயலாளர் ACAM. இஸ்மாயில்,மஸ்ஜிதுல்

நஹர் பள்ளிவாயலில் தேசிய வீடு அமைப்பு I.A.ஜப்பார் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

​நிகழ்ச்சி தொகுப்பினை மஸ்ஜிதுன் நகர் நிர்வாக உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல். எச்.எம். சித்தீக் அவர்கள் மேற்கொள்ள, நிகழ்வின் நன்றியுரையை தேசிய வழமைமைப்பு அதிகார சபையின் ஓய்வுபெற்ற முகாமையாளரும், மஸ்ஜிதுன் நகர் நிர்வாக செயலாளருமான ஏ. அப்துல் அசீஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

​புதிதாகப் பதவியேற்றுள்ள ஐ.ஜப்பார் அவர்கள், மஜ்லிஸ் அஷ்ஷூரா அமைப்பின் கொள்கை ரீதியான செயல்பாடுகளைத் தொடர்வதுடன், எதிர்காலத்தில் சமூக பாதுகாப்பு மற்றும் சமய விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இலங்கை ரீதியாகக் கவனத்தைப் பெற்றுள்ள சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா அமைப்பின் இந்த தலைமைத்துவ மாற்றம், உள்ளூர் சமூகத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

​இந்நிகழ்வில் மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள், சம்மாந்துறை ஊடக மையம்த்தின் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Share the Post: