தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி திடீரென தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தற்போது ஒரு வழிப்பாதையாக (One-way) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, ஹட்டனில் இருந்து கித்துல்கல வழியே பயணம் செய்யும் அனைத்து வாகனச் சாரதிகளும் அதிக அவதானத்துடன், வேகத்தைக் குறைத்து வாகனங்களைச் செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Post Views: 13




