• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) ஈடுபட்டுவருவதுடன் இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு  சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்திட்டசகர் தெரிவித்தார் அதேவேளையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு-

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலை பகுதியை சுற்றியுள்ள வீதிகளளில் ரோந்து நடவடிக்கையினை ஆமற்கொண்டுவருவதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதேவேளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக சிறைச்சாலை ஆராய்ந்து கொண்டார்

தற்போது குறித்த சிiறைச்சாலையில் நீர் கொழும்;பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் மோகன் தெரிவித்தார்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மலையகம் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண மக்கள் நீட்டிய நேசக்கரத்தை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் :  நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் எஸ். யோகராஜா