August 7, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) ஈடுபட்டுவருவதுடன் இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு  சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்திட்டசகர் தெரிவித்தார் அதேவேளையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு- நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட […]

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு Read More »

அரசாங்கம் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்தினால் அது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும்-கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் 

ஹஸ்பர் ஏ.எச் – மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்துவது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும் அப்படி இல்லையாயின் காலதாமதத்தை மேற்கொள்ளுமாக இருந்தால் ஜனநாயகத்தை மதிக்காத குற்றச்சாட்டாக அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக இருக்கும் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் இன்று (07) வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில் 2017ல் இருந்து இது வரைக்கும் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு சாட்டுப்போக்குகளையும் சொல்லி எப்படி மாகாண சபை தேர்தலை

அரசாங்கம் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்தினால் அது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும்-கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன்  Read More »

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர் சேதங்களுக்கும் காரணமாக இருந்து வந்த கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விசேட நடவடிக்கையின் மூலம் பிடித்துள்ளது. சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக விடப்பட்டு வீதிகளில் சுற்றித்திரிந்த மாடுகள் காரணமாக அன்றாடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வீதி விபத்துகள் அதிகரித்து வந்ததாகவும், விவசாயிகளின் பெறுமதிமிக்க பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்ததை அடுத்து இந்த

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை Read More »

ஆடி கிருத்தியை முன்னிட்டு மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008 சங்கா ஆபிஷேக நிகழ்வு

ஆடி கிருத்தியை முன்னிட்டு  மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008  சங்கா ஆபிஷேக நிகழ்வு. இந்துக்களின் வாழ்வில் ஆடி மாசம் மிகவும் சிறப்பு பெற்ற  மாதமாக  காணப்படுகிறது. ஆடி அமாவாசை கதிர்காமம் புனித பாதயாத்திரை, ஆடிப்பூரம் என முருகப்பெருமானுக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக, இந்துக்கள் மத்தியில் திகழ்கின்றது. இதேவேளை ஆடி கிருத்திளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(07.08.2026) மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ

ஆடி கிருத்தியை முன்னிட்டு மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008 சங்கா ஆபிஷேக நிகழ்வு Read More »

மலையகம் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண மக்கள் நீட்டிய நேசக்கரத்தை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் :  நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் எஸ். யோகராஜா

மலையகப் பிரதேசம் டித்வா புயலில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட காலகட்டத்தில் கிழக்கு மாகாண மக்களும், ஊடகங்களும் வழங்கிய மனிதாபிமான உதவி, ஆறுதல் மற்றும் ஒத்துழைப்பை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அந்த அனர்த்தக் காலத்தில் உதவிக்கரம் நீட்டிய கிழக்கு மாகாண மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நன்றி என நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ். யோகராஜா உணர்வுபூர்வமாக தெரிவித்தார். சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு பூர்த்தி விழா மற்றும் விசேட பாராட்டு விழா நுவரெலியா லேக்

மலையகம் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண மக்கள் நீட்டிய நேசக்கரத்தை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் :  நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் எஸ். யோகராஜா Read More »

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இங்கினியாகலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அம்பகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார் Read More »

சிறைகளும் குற்றவாளிகளும் அற்ற முன்மாதிரி நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று  உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: மீனவர் வாழ்வாதாரம் மீட்பு “நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது இந்த நாடு பாரிய வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. குறிப்பாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதவாறு பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு நிவாரணங்களை வழங்கினோம். இதன் விளைவாக, தற்பொழுது கடற்றொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவி தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகள் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அம்மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் உதவிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும். ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு இந்த ஆணையை வழங்கினார்கள். மக்களின் அந்த எதிர்பார்ப்பிற்கு அமைய, ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமான வழியில் உறுதியாக முன்னெடுக்கப்படும். குற்றங்களற்ற சமூகம் எமது ஆட்சியில் சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத நிலையை உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும். நாமும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பதால், சிறையில் இருப்பதன் வேதனையும் வலியும் எமக்கும் நன்றாகவே தெரியும். எனவே, நாட்டில் குற்றச் செயல்கள் முற்றாக இல்லாத சூழலை உருவாக்குவோம்” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறைகளும் குற்றவாளிகளும் அற்ற முன்மாதிரி நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »

ஹிஜ்றா சந்தி – அல்-மர்ஜான் வீதியை 4 வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை

பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழக வீதி அபிவிருத்திப் பணிகள் தீவிரமாக ஆய்வு: பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க சம்மாந்துறைக்கு விஜயம்! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க நேற்று (06) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு கள ஆய்வுகளில் ஈடுபட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்

ஹிஜ்றா சந்தி – அல்-மர்ஜான் வீதியை 4 வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை Read More »

 ‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த  டிப்பர் சாரதி கைது-பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட நபர் மருத்துவ பரிசோதனையில் சிக்கினார்

பாறுக் ஷிஹான் அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின்   நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 ‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த  டிப்பர் சாரதி கைது-பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட நபர் மருத்துவ பரிசோதனையில் சிக்கினார் Read More »

திராய்க்கேணிப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைவாக,

திராய்க்கேணிப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு Read More »