• Home
  • உள்ளூர் செய்திகள்
  • ஆடி கிருத்தியை முன்னிட்டு மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008 சங்கா ஆபிஷேக நிகழ்வு

ஆடி கிருத்தியை முன்னிட்டு மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008 சங்கா ஆபிஷேக நிகழ்வு

ஆடி கிருத்தியை முன்னிட்டு  மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008  சங்கா ஆபிஷேக நிகழ்வு.

இந்துக்களின் வாழ்வில் ஆடி மாசம் மிகவும் சிறப்பு பெற்ற  மாதமாக  காணப்படுகிறது. ஆடி அமாவாசை கதிர்காமம் புனித பாதயாத்திரை, ஆடிப்பூரம் என முருகப்பெருமானுக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக, இந்துக்கள் மத்தியில் திகழ்கின்றது.

இதேவேளை ஆடி கிருத்திளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(07.08.2026) மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து நாதஸ்வர மேள தாள வாத்தியங்கள் முழங்க பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதம் இருந்து மட்டக்களப்பு பிரதான வீதியூடாக திருச்செந்தூர் முருகன் பால்குடம் எடுத்து வரப்பட்டது.

அங்கு 1008  சங்காபிஷேகங்க வழிபாடுகள் இடம்பெற்றதன் பின்பு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றதுடன் ஆடி கிருத்தியை முன்னிட்டு விசேட பூஜைகளும் தாக சாந்தி நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மலையகம் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண மக்கள் நீட்டிய நேசக்கரத்தை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் :  நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் எஸ். யோகராஜா