August 7, 2026

பொறளை மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி

கொழும்பு பொறளை மகசின் சிறைச்சாலையில் இரவு (06) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று இரவு சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, அங்கு அமைதியற்ற சூழல் உருவானது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் […]

பொறளை மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி Read More »

மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்!

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா, நேற்று (06) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் புனிதக் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மடு திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மறைமாவட்டக் குருக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு நவநாள் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல

மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்! Read More »

வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

வழக்கு விசாரணைக்கு தொடர்ச்சியாக முன்னிலையாகாமல் இருந்துவரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மாத்தறை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, பசில் ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது. இதனை அமல்படுத்த சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியைப் பெற்று, அமெரிக்க நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளதாக அமைச்சர்

வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை Read More »

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கண்ணீர்ப்புகை பிரயோகம்!

இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலை வளாகத்திற்குள் இன்று (7) காலை மீண்டும் கடும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (6) இரவு குறித்த சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்ற நிலைமை தற்காலிகமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், இன்று காலையில் கைதிகள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கலவரத்தின் போது, சிறைச்சாலை வளாகத்திலுள்ள வைத்தியசாலைக் கட்டிடத்திற்கும் கைதிகள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைக்குள் தீவிரமடைந்துள்ள இந்த மோதல் மற்றும் பதற்றமான

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கண்ணீர்ப்புகை பிரயோகம்! Read More »

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறங்கும் அபாயம்: வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி திடீரென தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தற்போது ஒரு வழிப்பாதையாக (One-way) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, ஹட்டனில் இருந்து கித்துல்கல வழியே பயணம் செய்யும் அனைத்து வாகனச் சாரதிகளும் அதிக அவதானத்துடன், வேகத்தைக்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறங்கும் அபாயம்: வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை! Read More »