ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) இன்று வெள்ளிக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றின் நிமித்தம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் இவ்வாறு சமூகமளித்துள்ளார்.
குறித்த விசாரணைப் பிரிவின் அழைப்பை ஏற்று அங்கு வருகை தந்த அவரிடம், விசாரணை தொடர்பான மேலதிக வாக்குமூலங்களைப் பொலிஸார் பதிவு செய்து வருகின்றனர்.
Post Views: 44




