August 21, 2026

வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆஜர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) இன்று வெள்ளிக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார். நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றின் நிமித்தம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் இவ்வாறு சமூகமளித்துள்ளார். குறித்த விசாரணைப் பிரிவின் அழைப்பை ஏற்று அங்கு வருகை தந்த அவரிடம், விசாரணை தொடர்பான மேலதிக வாக்குமூலங்களைப் பொலிஸார் பதிவு செய்து வருகின்றனர்.

வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆஜர்! Read More »

பலாங்கொடை: மனைவியுடன் ஏற்பட்ட கோபத்தில் இரு பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமாகத் தாக்கிய தந்தை கைது!

மனைவி தொலைபேசி அழைப்பை ஏற்காத ஆத்திரத்தில், தனது 7 மற்றும் 4 வயதுடைய இரு பிஞ்சுக் குழந்தைகளையும் கொடூரமாகத் தாக்கி காணொளி (Video) அனுப்பி மிரட்டிய பாசமற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை, பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப வறுமை காரணமாகத் தனது 7 வயது ஆண் குழந்தையையும் 4 வயது பெண் குழந்தையையும் கணவரின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டிலிருக்கும் மனைவி தனது தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை

பலாங்கொடை: மனைவியுடன் ஏற்பட்ட கோபத்தில் இரு பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமாகத் தாக்கிய தந்தை கைது! Read More »

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இலங்கை ஆள்புல எல்லைக்கு வெளியிலா இருக்கு? சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கேள்வி

அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியுமானால், கல்முனையில் ஏன் முடியாது?” – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் தீவிர விசாரணை ■ அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக்காட்டி மறுக்க முடியாது: சுகாதார அமைச்சிடம் நிரந்தரக் கொள்கைத் தீர்மானத்தைக் கோருகிறது சட்டத்தரணிகள் தரப்புபாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இலங்கை ஆள்புல எல்லைக்கு வெளியிலா இருக்கு? சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கேள்வி Read More »

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை விளக்கமறியல்

கல்முனை நீதிமன்றம் அதிரடி உத்தரவு சூட்சுமமாக வளர்க்கப்பட்ட செடிகள் மீட்பு: புலனாய்வுப் பிரிவினரின் அதிரடிச் சுற்றிவளைப்பில் சிக்கிய 56 வயது நபர் கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கஞ்சாவினைத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (20) கல்முனை நீதவான்

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை விளக்கமறியல் Read More »

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்:உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை

பாறுக் ஷிஹான் கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை தெளிவுபடுத்தியுள்ளது.  விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகளான தா.பிரதீபன், மு.பிரகாஷ், நாகராஜா சனாதனன் மற்றும் சி.திலோஜன் ஆகியோர் கலந்துகொண்டு இத் தெளிவூட்டலை வழங்கினர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்:உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை Read More »

பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் தமிழ் இளைஞர் சேனை துண்டுப்பிரசுரம்

( பாறுக் ஷிஹான்) கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு விசேட தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது. குறித்த அமைப்பின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்தத் துண்டுப்பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: “கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட 9 இஸ்லாமிய பெண் சுகாதாரப் பணி உதவியாளர்கள் தமது

பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் தமிழ் இளைஞர் சேனை துண்டுப்பிரசுரம் Read More »

இந்தியா உதவி திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், 18.08.2026 அன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையேயான ஒரு கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றம், மாகாணப் பணப் பரிமாற்ற முறை குறித்த கலந்துரையாடல், அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகள், மாகாண வருவாய் இலக்குகளை அடைதல், கிழக்கு மாகாண

இந்தியா உதவி திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் Read More »