• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • முதியோர்களுக்கான மகிழ்வான வயோதிபம்” “மனதோடு பேசுவோம்” “மனந்திறந்து பேசுவோம் நிகழ்வு

முதியோர்களுக்கான மகிழ்வான வயோதிபம்” “மனதோடு பேசுவோம்” “மனந்திறந்து பேசுவோம் நிகழ்வு

ஹஸ்பர் ஏ எச்

தம்பலகாமம் பிரதேச பிரிவில் உள்ள கோவிலடி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில், இன்று (15/10/2026 )வியாழக்கிழமை முதியவர்களுக்கான உளநல மேம்பாட்டு நிகழ்வொன்று நடைபெற்றது,

மகிழ்வான வயோதிபம்”
“மனதோடு பேசுவோம்”
“மனந்திறந்து பேசுவோம்..” எனும் தலைப்பில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில்
வளவாளராக திருகோணமலை மாவட்ட செயலக உளவளத்துணை இணைப்பாளர் எம்.எஸ்.நசீர்கான், மற்றும் தம்பலகாம பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் மா.கொன்சலீன் ஆகியோர்கள் பங்கேற்றனர்,

வயோதிபம் என்பது உடல் முதிரும் பருவம் மட்டுமல்ல, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உரிமையும் எல்லா வயதினருக்கும் உண்டு.., என்பதனை வலியுறுத்தி மனதிலுள்ள உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தனிமை உணர்வுகளைக் கையாளும் வித்த்தில் தன்னம்பிக்கையையும் மனத்தைரியத்தையும் பல உளவியல் ரீதியான செயற்பாடுகள் முலம் வழங்கியிருந்தார்கள்,

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து முதியவர்களை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

Share the Post: