• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பில் அதிகாலை பயங்கரம்: நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

மட்டக்களப்பில் அதிகாலை பயங்கரம்: நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை பயங்கர தீ விபத்தொன்று சம்பவித்துள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரெனப் பரவிய தீயினால், அங்கிருந்த சில கடைகள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: