• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைப்பு

பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைப்பு

  பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம்இ பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான பிரியந்த வீரசூரியவினால் புதன்கிழமை (4)  உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வு நிமித்தம் மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபரை  கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே   மலர்க்கொத்து வழங்கி  வரவேற்றார்.

 அதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபருக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதை மற்றும் ஊர்வலம் என்பன நடத்தப்பட்டன.

அதன்பின்னர், அனைத்து மதத் தலைவர்களின் ஆசிகளுடன் கூடிய சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸ் பொறுப்பதிகாரியின் புதிய உத்தியோகப்பூர்வ இல்லத்தை பொலிஸ் மா அதிபர் நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணப் பிராந்திய பொலிஸ் உயர் அதிகாரிகள், மஹாவோயா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share the Post: