குச்சவெளி பிரதேசச் சபை தவிசாளருக்கு எதிராக ஆளுனர் செயலகம் முன் போராட்டம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அமைதி வழிப்போராட்டம் (06) இடம்பெற்றது. இதனை குறித்த பிரதேச சபையின் சில உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.குறித்த சபையின் சிற்றூழியர் ஒருவரை தவிசாளர் தாக்கியதால் நீதி கோரிய போராட்டம் இடம்பெற்றது 

ஊழியருடனான தவிசாளரின் அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கிறோம், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவரை மீ்ண்டும் தவிசாளராக தொடரவிட்டதன் விளைவே இது, அலுவலக அரசியலில் அலுவலர்களை தூண்டாதே பழிவாங்கலை நிறுத்து போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Share the Post: