• Home
  • உள்ளூர் செய்திகள்
  • பொத்துஹேராவில் ரயில் தடம் புரண்டு விபத்து! – வடக்கு ரயில் பாதையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பொத்துஹேராவில் ரயில் தடம் புரண்டு விபத்து! – வடக்கு ரயில் பாதையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பொல்கஹாவெலையிலிருந்து மஹாவ நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் ஒன்று பொத்துஹேரா ரயில் நிலையத்தில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தத் தடம் புரர்வு காரணமாக வடக்கு ரயில் பாதையூடான ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த பாதையில் பயணிக்கும் ஏனைய ரயில்களின் சேவைகளிலும் தாமதம் மற்றும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பால், பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தடம்புரண்ட ரயிலை மீண்டும் மீட்டெடுக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Share the Post: