• Home
  • உள்ளூர் செய்திகள்
  • ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு!

பதுளை மாவட்டம், பூனாகலை – கபரகலை பகுதியில் 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பாதுகாப்பற்ற முறையில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த 50 குடும்பங்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.

அவர்களுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று மக்கள் பாவனைக்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

இப்புதிய வீட்டுத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: