நிந்தவூர்: ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் சிறப்பு கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, அமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில் நிந்தவூர் Relax Garden இல் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு:
இந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்களிடையே பல்வேறு துறை சார்ந்த முக்கிய கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் ஊடகவியலாளர்கள் சம்மேளனங்களின் தலைவர்களுக்கு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது.
ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான பரஸ்பர தொடர்புகளை வலுப்படுத்தவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்த இந்நிகழ்வு, இரவு விருந்துபசாரத்துடன் இனிதே நிறைவுற்றது.






