September 7, 2026

ஒரு ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகள் கைகோர்கவும் — மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது —

கனகராஜா சரவணன்) ஒரு ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்பு வதற்கும்  எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார்  கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது அதன் தலைவராக ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்

ஒரு ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகள் கைகோர்கவும் — மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது — Read More »

கடவத்தையில் இலங்கையின் இரண்டாவது ‘மெட்ரோ பஸ்’ பணிமனை உத்தியோகபூர்வமாக திறப்பு!

இலங்கையின் பொதுப்போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், நாட்டின் இரண்டாவது ‘மெட்ரோ பஸ் பணிமனை’ (Metro Bus Depot) கடவத்தையில் இன்று (செப்டம்பர் 07, 2026) தனது சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனத்தின் மேலாண்மையின் கீழ் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேல் மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இப்பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயண இலகுவுக்காக அண்மைய

கடவத்தையில் இலங்கையின் இரண்டாவது ‘மெட்ரோ பஸ்’ பணிமனை உத்தியோகபூர்வமாக திறப்பு! Read More »

தோணிதாண்டமடுவில் அதிகாரிகள் அச்சுறுத்தல்: சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத்!

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உள்நில எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில், நேற்றைய தினம் (06.09.2026) பிற்பகல் வேளையில் சில அதிகாரிகள் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள், வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் இ.சிவேந்திரன் ஊடாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றனர். தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ

தோணிதாண்டமடுவில் அதிகாரிகள் அச்சுறுத்தல்: சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத்! Read More »

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை  ஹெரோயினுடன் சிக்கிய  7 போதைப்பொருள் வியாபாரிகள்

 பாறுக் ஷிஹான் அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதன நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி ஆகியோரின் உத்தரவின் பேரில்இ உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்ரமரத்ன மாவட்ட  குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை  ஹெரோயினுடன் சிக்கிய  7 போதைப்பொருள் வியாபாரிகள் Read More »

நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல் கோலாகலம்!

நிந்தவூர்: ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் சிறப்பு கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, அமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில் நிந்தவூர் Relax Garden இல் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு: இந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்களிடையே பல்வேறு துறை சார்ந்த முக்கிய கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. தொடர்ந்து,

நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல் கோலாகலம்! Read More »

மட்டக்களப்பு மாநகர சபையின் டிஜிட்டல் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்: AI மற்றும் QR Code தொழில்நுட்பங்கள் அறிமுகம்!

மட்டக்களப்பு மாநகர சபையினால் பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தகக் கண்காட்சியின் போது, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையிலும், மாநகர சபை ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் வழிகாட்டலிலும், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகரவினால் இச்சேவைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. QR Code மற்றும் AI தொழில்நுட்ப வசதிகள்: பொதுமக்களின் வசதிக்காக மாநகர சபைக்குட்பட்ட

மட்டக்களப்பு மாநகர சபையின் டிஜிட்டல் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்: AI மற்றும் QR Code தொழில்நுட்பங்கள் அறிமுகம்! Read More »

 ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு

திருக்கோவில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை பாறுக் ஷிஹான் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 26 வயதுடைய  சந்தேகநபர்   இன்று (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே விநாயகபுரம் 01, முன்பள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்

 ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு Read More »