ஹஸ்பர் ஏ எச்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் உள்ள நெற் செய்கை மேற்கொள்ளப்படும் விவசாய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வயல் நிலங்களில் நீர் தேங்கியுள்ளதால், விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரும்போக நெற்செய்கைக்கான நிலங்களைத் தயார்படுத்தி வரும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் வயல் நிலங்களில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 200ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
சில விவசாய நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன் சில வயல் நிலங்கள் விதைப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் போது இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.




