• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிண்ணியா பெரியாற்றுமுனை Rangers விளையாட்டுக்கழகம் நடாத்திய Rangers Premier League தொடரின் இறுதி நாள் நிகழ்வு

கிண்ணியா பெரியாற்றுமுனை Rangers விளையாட்டுக்கழகம் நடாத்திய Rangers Premier League தொடரின் இறுதி நாள் நிகழ்வு

A.H.HASFAR HASFAR
கிண்ணியா பெரியாற்றுமுனை Rangers விளையாட்டுக்கழகம் நடாத்திய Rangers Premier League தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த (17) சனிக்கிழமை Rangers விளையாட்டு மைதானத்தில், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிசார்டீன் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான Eng. றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு பணப்பரிசில்களையும் வெற்றிக்கிண்ணத்தினையும் வழங்கி வைத்தார்.

மேலும், கட்சியின் அரசியல் அதிகாரசபை உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான Dr. ஹில்மி , முகைதீன் பாவா, கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கிண்ணியா நகரசபையின் உதவித்தவிசாளர் சனாஸ் முகமட், கட்சியின் கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளர் அனீஸ் உள்ளிட்டோருடன் விளையாட்டு வீரர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Share the Post: