எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, வடிகால்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளை விரைவாகத் துப்புரவு செய்தல், மழைநீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு தடைகளை அகற்றுதல், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், அரச நிறுவனங்கள் மற்றும் துறைசார் அமைப்புகளுடன் இணைந்து அனர்த்த அபாயங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களைச் செயல்படுத்துவதன் அவசியமும், பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





