• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஜே.ஆர். சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன்–

ஜே.ஆர். சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன்–

  (கனகராஜா சரவணன்)

முன்னாள் ஜனாதிபதிகளான  ஜே.ஆர் ஜெயவர்தன. சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ தங்களுக்கு சாதகமான நண்பர்களை நீதியரசர்களை கொண்டு வந்தனர்.  அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். எனவே பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பதால் அதிபரின் வயதை கூட்டினால் சரியா? என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்

மட்டக்களப்பில் முன்னணி சோஷிஸக் கட்சி 22 வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘என்ன இந்த 22 வது திருத்தச் சட்டம் ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது’  என்ற தலைப்பிலான துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை மட்டு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று புதன்கிழமை (02) கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தோழர் முனசிங்க தலைமையில் இடம்பெற்றது இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் உள்ள 65 வயதுடைய நீதியரசர்களை 67 வயது வரை நீடிப்பதற்கு 22 வது அரசியல் அமைப்பு தொடர்பாக புதிய ஒரு சட்டத்தை ஆகஸ்ட் 18 ம் திகதிக்கு முன்னர் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது.  

இந்த சட்டம் கொண்டுவருவதற்கு காரணம் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறத தேசிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால் சாதாரண மனிதர்களுக்கு தெரியும் மேல் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்றங்களில் தான் கூடுதலான வழக்குகள் இருக்கிறது என.

இந்த நிலையில் நீதியரசர்களை 2 வருடம் நீடிப்பதை கொண்டு வருவது அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தன இதேபோல் அவருடைய நண்பரான நெவில் சமரகோன் என்ற சட்டத்தரணியை நீதியரசராக மாற்றினர்.

அவ்வாறே சந்திரக்கா ஜனாதிபதியாக வந்ததும் சட்ட ஆலோசகராக இருந்த  மார்க் பெர்னாண்டோ நிறுத்திவிட்டு அவரது நண்பரான சரத் டி சில்வா என்ற மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்திய அவரை நீதியரசராக மாற்றினார்.

நீதியரசராக இருந்த சிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் சொன்னதை செய்யவில்லை என்று அவரை நீக்கிவிட்டு அவர்களுக்கு சாதகமான வரை நீதியரசராக கொண்டு வந்தார்கள் அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  செய்கிறார் என எங்களுக்கு தோன்றுகின்றது.

நீதியரசருக்கு 2 வருடம் நீடிப்பதால் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் என்கின்றனர் அதாவது பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பதற்காக  அதிபரின்  வயதை கூட்டினால் சரியா? எனவே ஒரு புது கதை சொல்ல வேண்டாம்.

இன்று வழக்கு ஒன்றுக்கு சென்றால் அது தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வருவதற்கு 6 மாதங்கள் செல்கிறது அது வரைக்கும் விசாரணை கைதியாக வைத்திருக்கின்றனர். இதனால் வழக்கு காலம் நீடிக்கின்றது எனவே அங்குள்ள ஆளணி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இரண்டாவதாக நீதிமன்றங்களில் உள்ள ஆளணிகளை அதிகரிக்க வேண்டும் அல்லது புதிய நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் இவைகள் தான் சட்டத்துக்கு செய்ய வேண்டிய வேலை அதை விட்டுவிட்டு   2 வயதை கூட்டுவது எங்களுக்கு இருக்கும் கொஞ்ச ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயலாகும்.

2028 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரும் அது வரைக்கும் தங்களுக்கு தேவையான ஒருவர் அந்த பதவியை எடுக்க வேண்டும். அப்போது தான் தங்களுக்கு சாதகமான அரசியல் நகர்வுகளை  செய்யலாம் என்பதற்காக இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகின்றனர்.

ஆட்சியை கைப்பற்ற முன்னர் மக்களுக்கு நாங்கள் இடதுசாரிகள் என்று சொல்லிக் கொண்டு கொள்ளையடித்த பணத்தை பெற்று தருவோம், வெளிநாடுகளில்; களஞ்சிய படுத்தியுள்ள பணத்தை திரும்ப எடுப்போம், அத்துடன் அரச வங்கிகளில் தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடனை செலுத்தாது ஒழித்து ஓடியவர்கள் மற்றும் ஊதிய சேமலாப நிதியை கொள்ளையடித்த அருச்சுனா மகேந்திரனை சேட்டு கொளரில் பிடித்து இழுத்துக் கொண்டு வருவோம் என்றனர் ஆனால் நடந்தது என்ன? போதை பொருளை கடத்துபவர்களை பிடிக்கின்றோம்  கள்ளர்களை பிடிக்கின்றோம் என்கின்றனர்.

எனவே  நீதிக்கு புறம்பாக எந்த வொரு நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளுவதாக இருந்தாலும் மக்கள் பேசாது இருக்கும் வரைக்கும் அதற்கான தீர்வு கிடைக்காது எனவே இந்த பிழையான செயற்பாட்டிற்கு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் அதற்காக தான் முன்னணி சோஷலிஸக் கட்சி,   மக்கள் போராட்ட அமைப்புகள் இந்த அரசின் பிழையான நடவடிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கி அதை திருத்துமாறு சுட்டிக்காட்டும் நடவடிக்கையாக இந்த துண்டுப்பிரசுரம் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். என்றார்.  

Share the Post: