• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த 17 வயது இளம் வானியல் ஆர்வலர் – ‘Glocal Teen Hero’ விருதை வென்று சாதனை!

காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த 17 வயது இளம் வானியல் ஆர்வலர் – ‘Glocal Teen Hero’ விருதை வென்று சாதனை!

காத்தான்குடியைச் சேர்ந்த 17 வயது இளம் வானியல் ஆர்வலரான அமாஸிர் அமானத், “GLOCAL TEEN HERO SRI LANKA 2026” விருதைத் தட்டிச்சென்று காத்தான்குடி மண்ணிற்கும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான ‘Glocal Teen Hero South Asia 2026’ நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், தெற்காசிய அளவிலான இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இளம் வயதிலேயே அறிவியல் மற்றும் வானியல் துறைகளில் கொண்டுள்ள அளப்பரிய ஆர்வத்தின் மூலம், நாட்டின் எதிர்கால இளைய தலைமுறைக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழும் அமாஸிர் அமானத், வானியல் பயணத்தில் மேலும் பல மைல்கற்களை எட்டி நாட்டிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகள் குவிகின்றன.

Share the Post: