திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட மீரா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில், 98 அரபா நகரிலிருந்து கிண்ணியாவிற்குச் செல்லும் ஆட்டுப்பட்டி பாலவீதி தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியாவிற்குச் செல்வதற்காகப் பெருமளவிலான மக்கள் பயன்படுத்தும் இவ்வீதியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு வீதியை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரிடம் அவர்களிடம் பொதுமக்கள் சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Views: 18




