October 15, 2026

ஆட்டுப்பட்டி பாலவீதியைப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட மீரா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில், 98 அரபா நகரிலிருந்து கிண்ணியாவிற்குச் செல்லும் ஆட்டுப்பட்டி பாலவீதி தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிண்ணியாவிற்குச் செல்வதற்காகப் பெருமளவிலான மக்கள் பயன்படுத்தும் இவ்வீதியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு வீதியை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரிடம் அவர்களிடம் பொதுமக்கள் சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

ஆட்டுப்பட்டி பாலவீதியைப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை Read More »

வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம்

ஹஸ்பர் ஏ எச்  இந்தியாவின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Cochin Chamber of Commerce and Industry – CCCI) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள், 2026 ஒக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026

வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் Read More »

மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

vadivel shagthivel யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுத்தப்படுவதையும், மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில், திட்டங்களின் முன்மொழிவுகள் அனுமதிக்காகவும் மற்றும் மதிப்பீட்டுக்காகவும் அறிக்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு

மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

A.H.HASFAR HASFAR கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் (14.10.2026) சரஸ்வதி பூஜை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கலந்துகொண்டு வழிபாடுகளில் பங்கேற்றார். இந்நிகழ்வில், இறை ஆசியுடன் அனைவருக்கும் நல்வாழ்வும் முன்னேற்றமும் கிடைக்க வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு Read More »

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் சட்டவிரோத சுருக்கு வலையின் ஆதாரத்தை அழித்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி வருகின்றனர்–

மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார்–   (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில உத்தியோகத்தர்கள்  அதன் ஆதாரத்தை அழித்தும் அதற்கு பதிலாக பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றில் ஓப்படைத்து பொய்யான தகவலை கொடுத்து நீதிமன்றத்தை தவறான முறையில் வழிநடத்தி வருகின்றதுடன் இந்த சுருக்குவலை உரிமையாளர்களிடம் மாதாந்தம் பல இலட்சம் ரூபாவை இலஞ்சமாக

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் சட்டவிரோத சுருக்கு வலையின் ஆதாரத்தை அழித்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி வருகின்றனர்– Read More »

மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசு பொருளாகிய போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பும் சிறைச்சாலைக்கான காணி ஒதுக்கீட்டு விடையமும்.

vadivel shagthivel மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் செவ்வாய்கிழமை(13.10.2026) மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பும்

மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசு பொருளாகிய போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பும் சிறைச்சாலைக்கான காணி ஒதுக்கீட்டு விடையமும். Read More »

டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -திருமலை மாவட்ட அரசாங்க அதிபர்

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் மழைக்காலத்தின்போது அதிகரிக்கக்கூடிய டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார். டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடர்புடைய அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் (13) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத்

டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் Read More »

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

 (பாறுக் ஷிஹான்)சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாகத் தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே எமக்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன் Read More »