• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கடவத்தையில் இலங்கையின் இரண்டாவது ‘மெட்ரோ பஸ்’ பணிமனை உத்தியோகபூர்வமாக திறப்பு!

கடவத்தையில் இலங்கையின் இரண்டாவது ‘மெட்ரோ பஸ்’ பணிமனை உத்தியோகபூர்வமாக திறப்பு!

இலங்கையின் பொதுப்போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், நாட்டின் இரண்டாவது ‘மெட்ரோ பஸ் பணிமனை’ (Metro Bus Depot) கடவத்தையில் இன்று (செப்டம்பர் 07, 2026) தனது சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனத்தின் மேலாண்மையின் கீழ் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேல் மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இப்பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயண இலகுவுக்காக அண்மைய மாதங்களில் 104 புதிய மெட்ரோ பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக இரத்மலானையில் புதிய இயக்க முனையங்களும் (Running Yards), தலங்கம மற்றும் ஹோமாகம பகுதிகளில் மத்திய சேவை மையங்களும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share the Post: