பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் சிந்தனையில் உருவான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹாஷிம் உமர் பௌண்டேசன் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு தகுதியான தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். நடுவர் குழுவின் பரிசீலனைக்கு பின்னர் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ஹாஷிம் உமர் பௌண்டேசன், இல 46, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு – 03.
Views: 189




