இலங்கையின் 3 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளன.

  • தெதுறு ஓயா: 4 வான் கதவுகள் 3 அடி வீதம் திறப்பு (8,400 கன அடி நீர் வெளியேற்றம்).
  • லுணுகம்வெஹேர: 6 வான் கதவுகளும் திறப்பு (2,915 கன அடி நீர் வெளியேற்றம்).
  • ராஜாங்கனை: 6 வான் கதவுகள் திறப்பு (4,542 கன அடி நீர் வெளியேற்றம்).

இதன் காரணமாக தெதுறு ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளைப் பயன்படுத்தும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share the Post: