• Home
  • உள்ளூர் செய்திகள்
  • சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து விளக்கமறியல்!

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து விளக்கமறியல்!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஆராய்ந்த நீதவான், அவருக்குப் பிணை வழங்குவதற்குரிய வலுவான அல்லது விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

குற்றச்சாட்டின் பின்னணி

அரசு நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post: