• Home
  • உள்ளூர் செய்திகள்
  • செட்டிபாளையம் மைதானத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

செட்டிபாளையம் மைதானத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானம் 5 மில்லியன் ரூபா பெறுமதில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. அதன் ஆரம்ப வேலைத்திட்டம் புதன்கிழமை (29.07.2026) முதற்கட்டமாக அம்மைதானத்திற்குரிய தடுப்பச் சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகத் தலைவர் வேணு கோபாலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில பற்று பிரதேச சபையின்த விசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தடுப்புச் சுவர் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சா.மதிசுமன், உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரநிதிதிகள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடக்கூடிய ஓர் மைதானமாக இம்மைதானம் புனரமைக்கப்படவுள்ளதாக இதன்போது தவிசாளர் தெரிவித்தார்.

Share the Post: