• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மூதூரில் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீதி மின் விளக்குகளை வழங்கிய எஸ்.குகதாசன் எம்.பி 

மூதூரில் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீதி மின் விளக்குகளை வழங்கிய எஸ்.குகதாசன் எம்.பி 

ஹஸ்பர் ஏ ஹலீம் 

2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மூதூர் பிரதேச சபையின் கீழ் வரும் பள்ளிக்குடியிருப்பு, சம்பூர், கட்டைபறிச்சான், இருதயபுரம், கிளிவெட்டி ஆகிய வட்டாரங்களில் வீதி விளக்குகள் பொருத்துவதற்காக ஒன்பது இலட்சம் ரூபாய் பெருமதியான வீதி மின் விளக்குகள் (31) மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சண்முகம் குகதாசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன. 

இதில் மூதூர்ப் பிரதேச சபை தவிசாளர் எம்.டி.தாஹிஸ், மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் மற்றும் உதவி பிரதேச செயலாளர், மூதூர் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்,  மூதூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இரவு நேர போக்குவரத்து இதன் மூலம் சுதந்திரமாக மக்கள் பயணம் செய்யக்கூடிய வகையிலும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது

Share the Post: