திருவிழாவிற்கு முன்னதாக ஜெயகுமாரன் குளோபல் பவுண்டேசன் (JEYAKUMARAN GLOBAL FOUNDATION )இன் பூரண நிதியுதவி
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை கேணியடி சின்னத் தொடுவாய் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் நீண்டகால தேவையாக இருந்து வந்த நீர்த் தாங்கி, கேணியடி பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று JEYAKUMARAN GLOBAL FOUNDATION இன் பூரண நிதியுதவியுடன் (31) வழங்கப்பட்டது.
JEYAKUMARAN GLOBAL FOUNDATION இன் ஸ்தாபகர் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர், குமார் ஜெயக்குமரன், மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த உதவியை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஆலயத் திருவிழாவிற்கு முன்னதாகவே நீர்த் தாங்கி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பிரதேச மக்களின் நீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
“மக்களின் தேவையே எமது முன்னுரிமை. தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் உதவுவது எமது சமூகப் பொறுப்பு. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய எமது சமூகப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” என குமார் ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, இயன்றளவு விரைவாக அவற்றை நிறைவேற்றும் சமூகப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




