• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வடிகான் அமைப்பு வேலைகள்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வடிகான் அமைப்பு வேலைகள்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியின் (Fisheries Department Road) 9 ஆம் கிளைச் சந்தியில் தற்போது புதிய வடிகான் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வடிகான் கட்டுமான வேலைகள் காரணமாக, இப்பாதையூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வீதியைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தற்காலிகமாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களின் நன்மையைக் கருதி மேற்கொள்ளப்படும் இக்கட்டுமானப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share the Post: