அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம் –

கடந்த 26 ஆம் திகதி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற ரேடியோ மீலாத் நிகழ்வின்  போது, பாடசாலையின் கேட்போர் கூடத்திற்குத் தேவையான ஒலிபெருக்கி மற்றும் ஒலிவாங்கி உள்ளிட்ட ஒலி உபகரணங்களை, சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அல்ஹாஜ் அபூஹர் அவர்கள் அன்பளிப்பாக வழங்கி அன்றைய தினமே பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

அத்துடன், பாடசாலையின் உயர்தர வர்த்தகப் பிரிவுக்குத் தேவையான செலவினங்களுக்காக 20 இலட்சம் ரூபாய் நிதியையும் அல்ஹாஜ் அஜ்பர் ( Ajfar) அவர்கள் வழங்கினார்.

மேலும், பாடசாலையின் ஊடகப் பிரிவின் அபிவிருத்திக்காக **5 இலட்சம் ரூபாய் நிதியை** அல்ஹாஜ் ரைஸ் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

Share the Post: