கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நேற்று (03) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாழங்குடா பகுதியில் அவர் பயணித்த வாகனம் எதிர்பாராதவிதமாக மாடொன்றுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த டாக்டர் ஜி. சுகுணன் அவர்கள், உடனடியாக மீட்புப் பணிகளின் மூலம் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post Views: 22




