மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் (28) இடம்பெற்ற வீதி விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்சாரத் தூணுடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


Views: 67




