• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வந்தாறுமூலையில் 14 நாட்களாகக் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு: முந்திரிகைக் காட்டில் சோகம்

வந்தாறுமூலையில் 14 நாட்களாகக் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு: முந்திரிகைக் காட்டில் சோகம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கடந்த 14 நாட்களாகக் காணாமல்போயிருந்த நபர் ஒருவர், அதே பகுதியிலுள்ள முந்திரிகைக் காட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்த சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே இன்று முந்திரிகைக் காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், அவர் சடலமாகத் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: