• Home
  • உள்ளூர் செய்திகள்
  • ரஷ்யா மீது தாக்குதல்களை முப்பதாக்க யுக்ரைன் திட்டம்: ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உத்தரவு

ரஷ்யா மீது தாக்குதல்களை முப்பதாக்க யுக்ரைன் திட்டம்: ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உத்தரவு

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நீண்ட தூர ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களை கணிசமாக அதிகரிக்குமாறு யுக்ரைனிய இராணுவத்திற்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்த அவர், தற்போது தினசரி ஏவப்படும் 300 ட்ரோன்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 1,000 ஆக உயர்த்துவதே இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யா மீது இன்னும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் தேவை. இந்த இலக்கை நாம் நிச்சயமாக அடைவோம்,” என்றும் அவர் உறுதியளித்தார்.

முன்களப் பகுதியில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்யாவின் யரோஸ்லாவ் (Yaroslavl) பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை யுக்ரைன் இராணுவம் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ஜோன் ராட்க்ளிஃப் (John Ratcliffe) மொஸ்கோவிற்கு விஜயம் செய்து ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து அமெரிக்கத் தரப்பு யுக்ரைனுக்கு விளக்கமளித்துள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்தார். எனினும், இவிஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியுடன் எவ்வித சந்திப்பும் நடைபெறவில்லை என கிரெம்ளின் (Kremlin) தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, யுக்ரைனின் கிய்வ் (Kyiv), சுமி (Sumy), கெர்சன் (Kherson) மற்றும் கர்கிவ் (Kharkiv) ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Share the Post: