((கனகராஜா சரவணன்)
மாமாங்கேஸ்வரர் ஆலய பகுதியில் புட்டு கடைகளில் 250 ரூபாவுக்கு விற்பனை செய்து வரும் புட்டை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகரசபை சுயேச்சைக் குழு உறுப்பினர் சீனித்தம்பி ஜேந்திரகுமார் (ஜெயா) இன்று வியாழக்கிழமை (6) இடம்பெற்ற மட்டு மாநகர சபை அமர்வில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 16 வது சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (06) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த மாநகரசபை உறுப்பினர் தற்போது கடந்த 3ம் திகதி வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து இடம்பெற்றுவரும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள புட்டு கடைகள் மற்றும் புட்டு அவித்து விற்பனை செய்வேர் புட்டை 250 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்
கல்லடி பகுதியில் புட்டு 150 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர் ஆனால் தற்போது ஒரே குழலில் 3 அல்லது 4 புட்டு சேர்த்து அவிப்பதால் புட்டு சின்னாக வருகின்றது எனவே 250 ரூபாவாக விற்கும் புட்டை 150 ரூபாவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.
அதேவேளை குறித்த ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் அங்கு பிட்டுக்கு பிரபலியம் பெண்கள் நிலத்தில் பாய்விரித்து புட்டு அவித்து புட்டுடன் கத்தரிக்காய் கறி சமைத்து விற்பனை செய்து வருகின்றனர் இதனால் இரவில் புட்டு பிரியர்கள் படையெடுப்பதுடன் அங்கு ஆலய தரிசனத்துக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் இரவில் அங்கியிருக்கும் அதிகளவானோர் இரவு சாப்பாடு புட்டு சாப்பிடுவார்கள் அதனால் அங்கு புட்டுக்கு பிரபலியம் என்பது குறிப்பிடத்தக்கது.




