August 6, 2026

பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு!

சித்திரை புத்தாண்டு அழகிப் போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்தப் பாம்பை விற்பனை செய்த நபர் ஆகியோருக்குக் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெல்லன்வில அலுவலக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன்போது, வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குறித்த இளம் பெண்ணும், பாம்பை வழங்கிய நபரும் கைது

பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு! Read More »

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு பாறுக் ஷிஹான்கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து, பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி நிற்பதால்,

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி Read More »

மட்டு மாநகர சபை அமர்வில் 250 ரூபா விற்கும் புட்டு 150 ரூபா விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகரசபை உறுப்பினர் முன்வைப்பு-

((கனகராஜா சரவணன்)   மாமாங்கேஸ்வரர் ஆலய பகுதியில் புட்டு கடைகளில் 250 ரூபாவுக்கு விற்பனை செய்து வரும் புட்டை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகரசபை சுயேச்சைக் குழு உறுப்பினர் சீனித்தம்பி ஜேந்திரகுமார் (ஜெயா) இன்று வியாழக்கிழமை (6) இடம்பெற்ற மட்டு மாநகர சபை அமர்வில் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபையின் 16 வது சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (06) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது

மட்டு மாநகர சபை அமர்வில் 250 ரூபா விற்கும் புட்டு 150 ரூபா விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகரசபை உறுப்பினர் முன்வைப்பு- Read More »

பாடசாலை மாணவர்களைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்: 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாகப் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்: 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! Read More »

முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்  பாறுக் ஷிஹான்-நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. நீதி அமைச்சினால் கல்முனை வடக்கு   பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் கந்தசாமி அருள்பிரசாந்தனின்

முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல் Read More »

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

 சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டுக் அழிப்பு  பாறுக் ஷிஹான் கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன்  நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீன்  வழிகாட்டலில் இக்கடமை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின்

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை Read More »

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்துக இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை அரசிடம் வலியுறுத்து

இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் ஹஸ்பர் ஏ.ஹலீம்- இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்கள் 2026 ஆகஸ்ட் 05 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தார். வெளியுறவுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் தனிப்பட்ட உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இலங்கை விஜயத்தின்போதும், 2026 ஏப்ரலில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் விஜயத்தின்போதும் இந்திய

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்துக இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை அரசிடம் வலியுறுத்து Read More »

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இரு சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் புதன்கிழமை (05) சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இச்சோதனை நடவடிக்கையின் போது மல்வத்தை மல்வத்தை – கணபதிபுரம் பாடசாலை முன்பகுதியில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், 57

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது Read More »

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

பாறுக் ஷிஹான் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் கல்லூரியில்   இன்று    விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்ற இத்திட்டத்தில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கொசு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணிமனைச் சாரதி உள்ளிட்ட குழுவினர் இணைந்து பாடசாலை வளாகத்தில் விரிவான டெங்கு

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை Read More »

கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் தேசிய கல்லூரியில் தரம் 6 மற்றும் 7இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ‘aTd’ (Adult Tetanus and Diphtheria) தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்  புதன்கிழமை (05) இடம்பெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார செவிலியர், பொதுச் சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை

கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடவடிக்கை! Read More »