August 6, 2026

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர சிரேஷ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்திற்கு அமைய, அவர் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்ற இவர், தொடர்ந்து அக்கரைப்பற்று

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம் Read More »

அருகம்பே – சாவாலை வீதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காட்டு யானையொன்று புகுந்தமையால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது. கிராமத்திற்குள் புகுந்து மக்கள் நடமாடும் வீதிகளில் சுற்றித்திரிந்த இக் காட்டு யானையைக் கண்ட பிரதேச வாசிகள் பீதியடைந்ததுடன், ஊரார் ஒன்றுதிரண்டு அதனை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றனர். இதன்போது ஆத்திரமடைந்த காட்டு யானை, மக்களை நோக்கிப் பாய்ந்து

அருகம்பே – சாவாலை வீதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை Read More »

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு- 3 நாட்களுக்குள் மீட்கத் தவறின் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் திரிந்த கட்டாக்காலி மாடுகள், சம்மாந்துறை பிரதேச சபையினரால் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் புதன்கிழமை (05) பிடித்துக் கட்டப்பட்டுள்ளன. சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளினால் தினசரி வீதி விபத்துக்கள் சம்பவிப்பதுடன், பொதுமக்களின் பெறுமதியான பயிர் நிலங்களும் சேதமாக்கப்படுவதாகப் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து, இந்த நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு- 3 நாட்களுக்குள் மீட்கத் தவறின் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை Read More »

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது:  

பாறுக் ஷிஹான் அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த ‘மது’ எனப்படும் பெண் சந்தேகநபர், செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினராலும் இங்ஹினியாகல பொலிஸாராலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது:   Read More »