• Home
  • உள்ளூர் செய்திகள்
  • பாடசாலை மாணவர்களைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்: 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலை மாணவர்களைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்: 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாகப் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் மூவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post:

Related Posts