• Home
  • உலகச் செய்திகள்
  • சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு: 16 வயதிற்குட்பட்டோருக்குத் தடை விதிக்க நியூசிலாந்தில் புதிய சட்டமூலம்!

சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு: 16 வயதிற்குட்பட்டோருக்குத் தடை விதிக்க நியூசிலாந்தில் புதிய சட்டமூலம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய ‘இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை’ (Online Safety Bill) நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அறிவித்துள்ளார்.

சிறுவர்கள் சமூக ஊடக அடிமைத்தனம், இணையவழித் துன்புறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சட்ட விதிமுறைகளின்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் ஸ்னப்சாட் போன்ற முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களின் வயதை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் அல்லது பின்பற்றத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களின் சர்வதேச வருவாயில் (Global Revenue) 10% வரை அபராதமாக விதிக்கவும் இந்தச் சட்டமூலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: