18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடையும் வரை, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சமிந்த விஜேசிறி தரப்பினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை நிறைவுறும் வரை அவருக்கு பிணை அனுமதி வழங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Post Views: 41




